4 யானைகள் துடிதுடித்து பலி.. மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!! பகீர் வீடியோ

 
Tirupati

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் உணவு, குடி தண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

Tirupati

இந்த நிலையில் நேற்று இரவு ஆறு யானைகள் கொண்ட கும்பல் ஒன்று பார்வதிபுரம் அருகே உள்ள விளைநிலத்தில் புகுந்தது. அப்போது அங்கு மிகவும் தாழ்வாக இருக்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மின் கம்பி மீது யானைகள் உரசி சென்றபோது மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பரிதாபமாக மரணம் அடைந்து விட்டன.

கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கிராமத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மின் டிரான்ஸ்பார்மருக்கு எல்லை சுவர் போட்டு பாதுகாக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்தது.


அண்டை மாநிலமான ஒடிசாவில் இருந்து ஆறு யானைகள் கொண்ட கூட்டம் சமீபத்தில் அப்பகுதியில் நுழைந்தது. இதில் 4 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஏற்கனவே வனப்பகுதியில் உள்ள 8 யானைகள் உட்பட 14 யானைகளுக்கு யானை மண்டலம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

From around the web