ஒரே இடத்தில் 37 ஆயிரம் பெண்கள் நடனம்.. துவாரகாவில் ‘மஹா ராஸ்’ கோலாகலம்.. வைரல் வீடியோ!

 
Gujarat

குஜராத்தில் ஒரே இடத்தில் 37 ஆயிரம் பெண்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் துவாரகா நகரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோவில் உள்ளது. இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து மஹா ராஸ் திருவிழாவில் பங்கேற்றனர்.

Gujarat

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மருமகளின் நினைவாக கொண்டாடப்படும் இந்த விழாவை பாரதிய அஹிரானி மஹாராஸ் சங்கதன் எனும் அமைப்பினருடன் அகில் பாரதிய யாதவ் சமாஜ் மற்றும் அஹிரானி மஹிலா மண்டல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறுவதால், நந்த் தாம் எனும் இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான ஏசிசி சிமென்ட் நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டன. 37,000 பெண்களில் பெரும்பாலோனோர் குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சுமார் 1.5 லட்சம் அஹிர் யாதவ் இன மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ‘ராஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருந்து இதில் கலந்து கொண்டனர். மஹா ராஸ் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பகவத் கீதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில ஜம்நகர் சட்டசபை உறுப்பினர் பூனம்பென் பங்கு பெற்றார்.

From around the web