அரசு பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு.. மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவு!

 
Madhya Pradesh

அரசு பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு சட்ட திருத்தத்தை வெளியிட்டு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேசிய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

women

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த 3 மாத காலத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து பெண்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களை கவர்வதற்காக அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை இரு கட்சிகளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்திருந்தது.


இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநில பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மாநிலத்தில் உள்ள அரசு பணிகளில், பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, வனத்துறை தவிர்த்து அனைத்து அரசு துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

From around the web