30,000 காலியிடங்கள்.. போஸ்ட் ஆபீஸ் வேலை... விண்ணப்பிப்பது எப்படி..?

 
Post office

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில், பொதுப் பிரிவினருக்கு 1,406 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும், 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன .

பணியின் பெயர்: Branch Post Master, Assistant Branch Post Master

காலியிடங்கள்: 30,041

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்

Post Office

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். Stage 1: Registration என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: அதன் தொடர்ச்சியாக விவரங்களை சேகரிக்கும் பக்கம் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய கட்டாய விவரங்கள் உள்ளிட வேண்டும். முதலில் உங்களுக்கு என்று தனித்துவமான போன் நம்பர் வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஒரு தனித்துவ இமெயில் வேண்டும். பின்னர் விண்ணப்பதாரின் பெயர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போலவே இருக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து, அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10 ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவை இடம்பெற வேண்டும். போன் நம்பர் மற்றும் இமெயிலை சரிபார்க்க validate என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து தரவுகளை உறுதி செய்ய வேண்டும். கடைசியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை அதில் உள்ளது போலவே உள்ளிட்டு Submit செய்யவும்.

PO

ஸ்டெப் 3: அடுத்த கட்டமாக, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை உள்ளிடுவதற்கான பக்கம் தரையில் தோன்றும். அதில் ஆதார் எண், மாற்றி திறனாளியாக இருந்தால் அதற்கான குறிப்பு, 10 ஆம் வகுப்பில் படித்த மொழி, ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC) உள்ளதா போன்ற கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்த பதில்கள் அளித்து, புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்ற வேண்டும். புகைப்படத்தில் அளவு 50 KB கீழ் இருக்க வேண்டும், கையொப்பத்தின் அளவு 20 KB கீழ் இருக்க வேண்டும்.

ஸ்டெப் 4: அதன் பின்னர் நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் திரையில் தோற்றும். உங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு கீழ் உள்ள Box யை கிளிக் செய்து Submit கொடுக்கவும்.

ஸ்டெப் 5: இந்த ஸ்டெப் மூலம் நீங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்து முதல் Stage கடந்துவிடுவீர்.

ஸ்டெப் 6: அதன் பின்னர் Continue to Apply என்ற இடத்தை கிளிக் செய்து, தொடர்ந்து விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்லவும். அதில் உங்கள் போன் எண்ணுக்கு OTP எண் ஒன்று வரும். அதனை விண்ணப்பபடிவத்தில் உள்ளீடு செய்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

PO

ஸ்டெப் 7: ஆன்லைன் விண்ணப்படிவம் திரையில் தோன்றும். அதில் உங்களின் பெயர், அப்பா பெயர், பாலினம், பதிவு எண், பிறந்த நாள் மற்றும் சாதி ஏற்கனவே இடம்பெற்று இருக்கும். அதன் கீழ் உங்களில் வீட்டு முகவரி தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். வீட்டு முகவரியைப் பொறுத்தவரைக் கதவு எண், தெரு பெயர், பகுதி, மாவட்டம் மற்றும் அஞ்சல் குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும். நிரந்தர முகவரிக்கும் அதையே கொண்டு பூர்த்தி செய்யலாம். தொடர்ந்து, அதன் கீழ் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிடவும். அதனைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதற்கான கட்டங்கள் திறக்கும். அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைச் சரியாகப் பதிவிடவும். மொழி தேர்வில் தமிழ் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் save and continue என்ற இடத்தை கிளிக் செய்யவும்.

From around the web