மத்திய அரசில் 212 காலியிடங்கள்... 10ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

 
CRPF

மத்திய ரிசர்வ் காவல் படையில் காலியாக உள்ள 212 காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 212 காலி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை வரும் மே 21ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர்: Sub-Inspector, Assistant Sub-Inspector

காலியிடங்கள்: 212 (Sub-Inspector - 51, Assistant Sub-Inspector - 161)

கல்வித்தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது, டிப்ளமோ, பட்டம், B.Sc, B.E அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.

CRPF

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர் 21-05-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: 

Sub-Inspector  - ரூ. 35,400 - 1,12,400

Assistant Sub-Inspector  - ரூ. 29,200 - 92,300

விண்ணப்ப கட்டணம்:

Sub Inspector பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் General, EWS and OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். Assistant Sub Inspector பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் General, EWS and OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

application

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://rect.crpf.gov.in/ இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.05.2023

From around the web