நீட் நுழைவுத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்... தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

 
Neet

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன் எப்போதும் இல்லாத அளவில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

Neet

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20.8 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும் 9 லட்சத்து 02 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படியில் ஒபிசி பிரிவு மாணவர்கள் 8.9 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

மாநில வாரியாக அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் 2.77 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் 2.73 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

Neet

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எனினும், நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்தாலும், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் முந்தைய ஆண்டுகளில் இதுபோலத்தான் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

From around the web