பெண்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு... அரசு அதிரடி அறிவிப்பு!!

 
puducherry

அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளனர்.

2030-ம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி ஒழிப்பு பற்றிய செயல் திட்டம் வகுப்பது சம்மந்தமான 2 நாட்கள் நடைபெறும் பயிலரங்கை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை, “முதல்வர் ரங்கசாமியிடம் நான் ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். பெண்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 2 மணி நேரம் வேலையில் சலுகை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். புதுவையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுக்கு செல்வ சலுகையும் உள்ளது. நேர சலுகையும் உள்ளது. ரூ.1000 பணமும் கொடுக்கப்படுகிறது. நேரச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் பெண்கள் ஆக்கப்பூர்வத்துடனும் ஊக்கமுடனும் பணியாற்றுவார்கள். பெண்களுக்கான 2 மணி நேர வேலை நேரம் குறைப்பு என்பது அரசுத் துறைக்கு சொல்லியுள்ளோம். அரசுத் துறையைப் பார்த்து தனியார் துறையும் பின்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.” என்றார்.

staff

இதுதொடர்பாக, புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8.45 முதல் காலை 10.45 வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.

இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படக்கூடாது.

Rangasamy

பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை (அ) அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web