ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 சிறுவர்கள்.. காவலாளிகளை கடப்பாரையால் அடித்துக் கொலை!! வெளியான சிசிடிவி காட்சி

ஆந்திராவில் 2 காவலாளிகளை கடப்பாரையால் அடித்துக் கொன்று, 2 சிறுவர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள உள்வட்ட சாலையில், ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், மோட்டார் சைக்கிள் ஷோரூம் மற்றும் மது விற்பனைக் கடையில் காவலுக்கு இருந்த ஸ்ரீராமகிருஷ்ண நிதி, சாம்பசிவராவ் ஆகிய இருவரையும் கடப்பாரையால் அடித்துக் கொன்று, கொள்ளை அடிக்க முயன்றனர்.
கொள்ளை முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அதே பகுதியில் மேலும் நான்கு கடைகளில் கொள்ளையடிக்க முயன்று தோல்வி அடைந்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காலையில் போலீசார் விசாரணை நடத்தியதில், 6 இடங்களிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்பதை கண்டறிந்தனர்.
அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், காவலாளிகளை கொலை செய்து இரண்டு பேரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனங்கள், கடப்பாரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.