7 வது மாடியில் இருந்து குதித்த 17 வயது மாணவி பலி.. நுழைவுத் தேர்வு தோல்வியால் விபரீதம்

 
Delhi

டெல்லியில் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

தலைநகர் டெல்லி ஜாமியா நகர் ஓக்லா பிரதான சந்தையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து நேற்று பகல் 11.25 மணிக்கு 17 வயது மாணவி குதித்துள்ளார். இதுகுறித்து ஜாமியா நகர் காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

suicide

அப்போது தற்கொலை செய்துகொண்ட அவர் 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர் என்பது தெரியவந்தது. படிப்பு அழுத்தம், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது, தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாணவி தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


மேலும், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாததால், தன்னை மன்னிக்கும்படி பெற்றோரிடம் தனது தற்கொலை குறிப்பில் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

From around the web