1,747 காலிப் பணியிடங்கள்... 10வது முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!!

 
IOC

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,747 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜனவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பயிற்சியிடங்களின் விவரம்: Technician Apprentices, Graduate Apprentices, Trade apprentices

காலிப்பணியிடங்கள்: 1,747. இதில், தமிழ்நாட்டில் 24 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Application

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://www.iocl.com/apprenticeships என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2023

From around the web