இடியோடு கொட்டிய கோடை மழை..  மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு..!

 
Lighting death

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி நேற்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களை அனுப்பியிருந்தது. மக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பல மாநிலங்களில் கோடை மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது. இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

West Bengal

அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

Lighting

இதேபோல பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியுள்ளார்.

From around the web