நவம்பரில் 14 நாட்கள் விடுமுறை.. முன்கூட்டியே வங்கி வேலைய முடிங்க..!

 
Bank

நவம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 14 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

Bank

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. நவம்பர் மாதத்தில் சுமார் 14 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

நவம்பர் 1, 2023 - புதன்கிழமை - கன்னட ராஜ்யோத்சவா/கர்வா சவுத் (கர்நாடகா, மணிப்பூர், இமாச்சல பிரதேசம்)
நவம்பர் 10, 2023 - வெள்ளிக்கிழமை - வாங்கலா திருவிழா (மேகாலயா)
நவம்பர் 11, 2023 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
நவம்பர் 12, 2023 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 13, 2023 - திங்கட்கிழமை - கோவர்தன பூஜை/லக்ஷ்மி பூஜை/தீபாவளி (திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா)
நவம்பர் 14, 2023 - செவ்வாய்க்கிழமை - தீபாவளி/விக்ரம் சாவந்த் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜை (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம்)
நவம்பர் 15, 2023 - புதன்கிழமை - பாய் தூஜ்/சித்ரகுப்த ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை/நிங்கோல் சகோபா/Bhratridwitiya (சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம்)
நவம்பர் 19, 2023 - ஞாயிற்றுக்கிழமை

Holiday
நவம்பர் 20, 2023 - திங்கட்கிழமை - Chhath (பீகார்) 
நவம்பர் 24, 2023 - செவ்வாய்க்கிழமை - செங் குட்ஸ்நெம்/எகாஸ்-பக்வால் (உத்தரகாண்ட், சிக்கிம்)
நவம்பர் 25, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
நவம்பர் 26, 2023 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 27, 2023 - திங்கட்கிழமை - குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா (திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சண்டிகர், உத்தரகாண்ட், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், புதுடெல்லி, பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம்)
நவம்பர் 30, 2023 - வியாழக்கிழமை - கனகதாசா ஜெயந்தி (கர்நாடகா)

From around the web