காதலனின் போனில் 13,000 ஆபாச படங்கள்.. அதிர்ந்த காதலி செய்த துணிச்சலான செயல்!

கர்நாடகாவில் காதலனுடைய செல்போனில் 13 ஆயிரம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை பார்த்த காதலி துணிச்சலுடன் எடுத்த முடிவு பாராட்டத்தக்கதாக உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிபிஓ நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் தன்னுடன் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் இவர் தன் காதலனுக்கு தெரியாமல் அவரது செல்போனில் இருக்கும் தனது புகைப்படங்களை பார்த்துள்ளார்.
காதலன் இல்லாத சமயத்தில் அவரது செல்போனை எடுத்துப் பார்க்கையில், அப்பெண்ணின் புகைப்படம் மட்டுமல்லாது அவருடன் பணிபுரியும் பல பெண்களின் ஆபாச படங்கள் அதில் இருந்துள்ளன. சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அதில் இருப்பதைக்கண்டு அதிர்ந்துள்ளார்.
என்னசெய்வது என்று யோசித்த அந்தப் பெண், அவர் மட்டுமல்லாது தன்னுடன் சேர்ந்த அத்தனை பெண்களையும் காப்பாற்ற நினைத்து அலுவலகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார்.
விவரத்தை தெரிந்துகொண்ட அந்நிறுவனத்தின் சட்டப்பிரிவுத் தலைவர், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.