ஜூன் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறை.. வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

 
Bank

ஜூன் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 13 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

Bank

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஜூன் மாதத்தில் சுமார் 13 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஜூன் 1, 2024 - சனிக்கிழமை - ஏழாம் கட்ட மக்களவை தேர்தல்
ஜூன் 2, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 8, 2024 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
ஜூன் 9, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 10, 2024 - திங்கட்கிழமை - ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் (பஞ்சாப்)
ஜூன் 14, 2024 - வெள்ளிக்கிழமை - பஹிலி ராஜா (ஒடிசா)
ஜூன் 15, 2024 - சனிக்கிழமை - ஒய்எம்ஏ தினம் மற்றும் ராஜா சங்கராந்தி (மிசோரம், ஒடிசா)

bank
ஜூன் 16, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 17, 2024 - திங்கட்கிழமை - பக்ரித்
ஜூன் 21, 2024 - வெள்ளிக்கிழமை - வடசாவித்ரி விரதம் (வட மாநிலங்கள்)
ஜூன் 22, 2024 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
ஜூன் 23, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 30, 2024 - ஞாயிற்றுக்கிழமை

From around the web