12 நாட்கள் விடுமுறை! வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

 
Bank

மார்ச் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 12 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

Bank

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. மார்ச் மாதத்தில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

மார்ச் 3, 2023 - வெள்ளிக்கிழமை - சாப்சர் குட் (மிசோரம்)
மார்ச் 5, 2023 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7, 2023 - செவ்வாய்க்கிழமை - ஹோலி விடுமுறை (பேலாபூர், டேராடூன், குவஹாத்தி, ஹைதராபாத் - தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகள்)
மார்ச் 8, 2023 - புதன்கிழமை - ஹோலி இரண்டாம் நாள் (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ, புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா)
மார்ச் 9, 2023 - வியாழன்கிழமை - ஹோலி (பாட்னா)
மார்ச் 11, 2023 - சனிக்கிழமை - இரண்டாவது சனிக்கிழமை

Holiday
மார்ச் 12, 2023 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 19, 2023 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 22, 2023 - புதன்கிழமை - குடி பத்வா/உகாதி பண்டிகை/பீகார் திவாஸ்/சாஜிபு நோங்மபான்பா (செய்ராபா)/தெலுங்கு புத்தாண்டு தினம் (பேலாபூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் - தெலுங்கானா, இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ஸ்ரீநகர்)
மார்ச் 25, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
மார்ச் 26, 2023 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 30, 2023 - ஸ்ரீ ராமநவமி ( அகமதாபாத், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத் - தெலுங்கானா, ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ராஞ்சி, சிம்லா)

From around the web