தெலுங்கானாவில் பட்டம் விட்ட 11 வயது சிறுவன் பரிதாப பலி... மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்!

 
Telangana

தெலுங்கானாவில் பட்டம் விட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிறுவன் தன்ஷிக் (11). நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது வயதொத்த மாணவர்களுடன் அங்குள்ள பகுதியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வந்து பட்டத்தை காற்றில் செலுத்திக் கொண்டிருந்தனர்.

shock

அப்போது  சிறுவனின் பட்டம்  அவ்வழியாகச் சென்ற மின்சார கம்பிகள் மீது நேரடியாக பட்டது. இதில்  சிறுவனின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைக் கண்டதும் அங்கிருந்த சிறுவர்கள்  அதிர்ச்சி அடைந்து சிறுவனின் பெற்றோரிடம் கூறினர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த குடும்பத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Police

விடுமுறை நாட்களில்  செல்போன் விளையாட்டுகளில் மூழ்கி விடாமல் இப்படி உடல் சார்ந்த விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் ஆபத்து ஏற்படாமல் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை கண்காணிக்க வேண்டும் என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.

From around the web