யூடியூபில் வீடியோ பார்த்து தற்கொலை செய்து கொண்ட 11 வயது சிறுவன்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
UP

உத்தர பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான வீடியோவை பார்த்தது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சுமேர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நிகில் சாகு (11). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (டிச. 21), வீட்டில் தனியாக இருந்த நிகில் சாகு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

boy-dead-body

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவன் நிகில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுவன் நிகில் சாகு வீட்டில் தனியாக இருந்தபோது, யூடியூப் வலைதளத்தில் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான வீடியோவை பார்த்தது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த பிறகு சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Police

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web