வாளியில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாப பலி.. விளையாடிய போது நேர்ந்த விபரீதம்!
மகாராஷ்டிராவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறவன் வாளியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் மாவட்டம் பலஸ்பே கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளி ஒன்றில் அவனது பந்து விழுந்து விட்டது. அந்த வாளியில் விழுந்த பந்தினை எடுக்கும் முயற்சியில் சிறுவன் தவறி உள்ளே விழுந்தான்.
தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் விழுந்த வேகத்தில் வாளியின் குறுகலான உட்புற அடிப்பகுதியில் கால்கள் மாட்டிக்கொண்டதில், சிறுவன் தண்ணீரில் மூழ்கி மூச்சுக்குத் தடுமாறித் தவித்தான். சிறிது நேரம் கழித்தே விளையாடிக் கொண்டிருந்த மகனைத் தேடிய அவனது தாயார், தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் மகனைக் கண்டு அதிர்ந்து போனார்.
சிறுவன் மயங்கி கிடப்பதாக கருதி அவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து பன்வெல் நகர காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை பன்வெல் மாவட்டம் பலஸ்பே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் தவறுதலாக வாளியில் விழுந்து மூச்சுத் திணறத் உயிரிழந்துள்ளான். எனினும் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே இறப்புக்கான காரணத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.