10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா..? 1,558 காலிப்பணியிடங்கள்.. மத்திய அரசு வேலை!!

 
SSC

மத்திய அரசின் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பதவியின் பெயர்: பன்முக உதவியாளர், ஹவால்தார்

காலிப்பணியிடங்கள்: 1,558 (பன்முக உதவியாளர் - 1,198, ஹவால்தார் - 360)

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC

வயது வரம்பு: 

01.08.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் மற்றும் திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.

application

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2023

From around the web