1000 காலிப் பணியிடங்கள்.. சென்ட்ரல் பேங்கில் வேலை வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க...!

இந்திய மத்திய வங்கியில் 1,000 மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மத்திய வங்கியில் ( Central Bank of India) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிடங்கள்: 1000
கல்வித்தகுதி:
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். CAIIB படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வங்கியில் 3 ஆண்டுகள் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். (அல்லது) ஏதேனும் ஒரு வங்கியில் எழுத்தர் பதவியில் ஆறு ஆண்டு கால அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்: MMG SCALE II 48,170-1740(1)-49910-1990(10)-69,810
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.05.2023 அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
எழுத்துத் தேர்வு:
இத்தேர்வு, கணினி குறித்த பொது விழிப்புணர்வு (Computer Awareness), வங்கி செயல்பாடுகள் (banking) தற்காலிக பொருளாதார நிகழ்வு மற்றும் பொது விழிப்புணர்வு (Present Economic Scenario & General Awareness) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதாக இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பதவிக்கு https://ibpsonline.ibps.in/cbimmjun23/ என்ற அங்கீகரிக்கப்பட்ட இணைய முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2023