100 நாள் வேலைத் திட்டம் நிலுவைத் தொகை! பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை!!
Jan 13, 2025, 19:44 IST

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசு வறுமை ஒழிப்புத் திட்டமாக அறிவித்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் படி ஊரகப்புறத்தில் உள்ள மக்களுக்கு குறைந்தது ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு தரவேண்டிய 1056 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. இதை உடனடியாக விடுவிக்க வே\ண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.