பகீர் வீடியோ.. விடுதிக்குள் வேகமாக பாய்ந்த கார்.. பெண் பலி!
கோவாவில் கார் மோதியதில் தங்கும் விடுதியின் பெண் உரிமையாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம் வஹடார் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு விடுதியின் உரிமையாளரான ரெமிடியா மேரி (57) விடுதி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வேகமாக வந்த கார் விடுதிக்குள் புகுந்தது. கார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் விடுதி உரிமையாளர் ரெமிடியா மேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட விடுதி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெமிடியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
VAGATOR ACCIDENT: DRIVER IN 4 DAYS CUSTODY pic.twitter.com/BcEPaOr5Cw
— Prudent Media (@prudentgoa) November 13, 2023
விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த குருப்பின் மனைவி விபத்து நடந்த இடத்திற்கு வந்து வாகனத்தில் கிடந்த பையை எடுத்துச் சென்றார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 304 (கொலை அல்லாத குற்றமற்ற கொலை) மற்றும் 337 (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எந்த ஒரு செயலையும் அலட்சியமாகவும், அலட்சியமாகவும் செய்து யாரையும் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குருப்புக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.