தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்கள் எப்ப வரும்? நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி!!
அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுள்ளதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ரயில்வே மசோதா மீது உரையாற்றிய திமுக பாராளுமன்றக் குழு தலைவரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி, தொகுதிக்கான கோரிக்கைகளையும் முன் வைத்தார்.
இங்கு பேசிய உறுப்பினர்கள் பெரும்பாலானோர், அரசு அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டு இந்த அவையின் உரிமைகளைப் பறித்துக் கொண்டதாகக் கூறியுள்ளனர். என்ன செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்திற்கே சொல்லும் நிலைக்கு அரசு அதிகாரங்களை எடுத்துக் கொண்டுள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் தூய்மை அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு அமைச்சருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தெற்கு ரயில்வேயின் ரயில் பெட்டிகள் மற்ற டிவிஷன்களை விட மோசமாக உள்ளது. தெற்கு ரயில்வே மற்ற டிவிஷன்களைப் போல் நல்ல ரயில் பெட்டிகளை பெறுவதற்கு தகுதி வாய்ந்ததாகும்.
என்னுடைய தொகுதியான தூத்துக்குடியில் பெரிய துறைமுகம் உள்ளது. ஏராளமான சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மாநிலத் தலைநகரான சென்னைக்கு தூத்துக்குடியிலிருந்து ஒரே ஒரு இரவு நேர ரயில் மட்டுமே இருக்கிறது. தூத்துக்குடிக்கான பல ரயில் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.பகல் நேரத்தில் செல்லக்கூடிய வகையில் சென்னை - தூத்துக்குடி வந்தேபாரத் ரயில் அறிமுகப்படுத்த வேண்டும், அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரயில்வே ரயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், இரயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும் பேசினேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 5, 2024
தமிழ்நாட்டில் சென்னை - தூத்துக்குடி இடையே ரயில் சேவையை… pic.twitter.com/NiuqGDu3ZP