காங்கிரஸ் கட்சியை காப்பி அடிக்கும் பாஜக! டி.கே.சிவக்குமார் பெருமிதம்!!

 
D K Sivakumar

காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்து தாங்கள் ஆளும் மாநிலங்களில் பாஜக செயல்படுத்துகிறது என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு கர்நாடகத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் துணை முதல்மைச்சர் டி.கே.சிவக்குமார், தேசிய அரசியலிலும் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இமாச்சல் பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், தெலங்கானா மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் வியூகம் அமைத்து களத்திலும் செயல்பட்டவர் ஆவார்.

இந்நிலையில் துமகூரு நகரில் நடந்த  ஒருங்கிணைந்த குடிநீர் திட்ட விழாவில் பேசிய டி.கே.சிவக்குமார், பாஜக அரசு தங்கள் கட்சி செயல்படுத்தி வரும் திட்டங்களை பாஜக அரசு காப்பி அடித்து வருவதாக கூறியுள்ளார். இந்திரா காந்தி காலம் முதலாகவே காங்கிரஸ் கட்சியின் அரசுகள் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தவுடன், 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 உறுதிகள் ( Guarantee Scheme) திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதைக் காப்பி அடித்து பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்துகிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியே. எங்கள் திட்டங்கள் தேசிய அளவில் மாடல் திட்டங்களாக ஆகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பாஜக காப்பி அடிக்கிறது என்று கூறிய டி.கே.சிவக்குமாரின் பேச்சு கர்நாடகாவில் பேசு பொருளாகி வருகிறது.

From around the web