குளவிக்கல்லால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி!!

 
Police-arrest

கணவன் மனைவி தகறாரில் கணவனை குளவிக்கல்லால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் 42 வயது அன்பரசனுக்கு 38 வயது கலைவாணி என்ற மனைவி இருந்தார். கணவன் அன்பரசனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 

தகராறு முற்றிய நிலையில் நேற்றிரவு கணவர் அன்பரசனை குளவிக்கல் கொண்டு கலைவாணி அடித்துக்கொலை செய்துள்ளார் . தகவல் அறிந்த போலீசார் மனைவி கலைவாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்பரசனின் உடலைக் போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.