குடும்ப தகராறு.. பீர் பாட்டிலை வைத்து மனைவி எடுத்த விபரீத முடிவு!

 
salem salem

சேலம் அருகே குடும்ப தகராறில் பீர் பாட்டிலால் கழுத்தில் தன்னைத்தானே குத்திக்கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (31). இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 14 வயது மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 5 வருடங்களாகவே கருது வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதேபோல், சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தமிழழகன் (31), 14 வருடங்களுக்கு முன்பு மேட்டூரைச் சேர்ந்த வினோதினி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வினோதினி மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுள்ளார். இதையடுத்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயலட்சுமியுடன் மனைவியை பிரிந்து வாழ்ந்த தமிழழகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அம்மாபேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். 

dead-body

இந்த நிலையில், 9ம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமியின் மூத்த மகள் பள்ளி மாதாந்திர தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வியடைந்தது காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டில் தங்களது கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது ஒரு கட்டத்தில் கோவத்தின் உச்சத்துக்கே சென்ற ஜெயலட்சுமி ஆத்திரத்தில் வீட்டில் உடைந்து கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தன்னைத் தானே கழுத்தில் குத்திக் கிழித்துள்ளார். இதில் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்து ரத்தம் வீடு முழுவதும் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Ammapettai Salem PS

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மாப்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கணவன் தமிழழகனை அம்மாபேட்டை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

From around the web