ஆபாச செய்கை மூலம் சமூகத்தை கெடுக்கும் வீடியோக்கள்.. இன்ஸ்டா பிரபலம் மீது வழக்கு!

 
Youtuber Inba

யூடியூப்பில் மோனோ ஆக்டிங் செய்து வீடியோக்களை பதிவு செய்து வந்த இன்பா என்பவர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இன்பா (எ) இன்பநிதி (24). இவர், இன்பா டிராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் தொடர்ந்து மோசமான செய்கைகளோடு மோனோ ஆக்டிங் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவர் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Inba

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, சைபர்‌ கிரைம்‌ காவல்‌ நிலையத்தில்‌ பணிபுரிந்து வரும்‌ விஜய்‌ (26) என்பவர்‌ இணைய மற்றும்‌ சமூக வலைதள குற்றச் செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்களை கண்காணித்த போது, கடந்த டிசம்பர் 4ஆம்‌ தேதி சமுக வலைதளமான YouTube மற்றும்‌ Instagram -ஐ பார்த்துக்‌ கொண்டு இருந்தபோது inba's track என்ற பெயரில்‌ @inba's track - என்ற ஐடி -யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில்‌ ஆபாசத்தை தூண்டும்‌ வகையில்‌ பேசுவதுபோல சமூக வலைதளங்களில்‌ ஆங்கிலத்தில்‌ TEXT வருவது போல mono-acting மூலம்‌ வீடியோக்களை பதிவேற்றம்‌ செய்துள்ளார்‌.

மேலும்‌, இவரின்‌ mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள்‌ அனைத்தும்‌ அருவருக்கத்தக்க வகையிலும்‌, ஆபாசமான வகையிலும்‌ உள்ளது. இந்த வீடியோக்களை பார்க்கும்‌ மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ கல்லூரியில்‌ படிக்கும்‌ இளைஞர்களிடம்‌ மீண்டும்‌ வீடியோக்களை பார்க்கத் தூண்டி, பாலுணர்வுகளை தாண்டும்‌ வகையிலும்‌, ஆபாசமாகவும்‌, மேலும்‌ முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும்‌, பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும்‌ mono-acting மூலம்‌ பல வீடியோக்களை சமூக வலைதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்து Instagram -ல்‌ 82,000-க்கும்‌ மேற்பட்ட Followers மற்றும்‌ YouTube-ல்‌ 1,93,000 subscribers பெற்று உள்ளதால்‌, இவரது வீடியோக்களைப்‌ பார்க்கக்‌ கூடிய குழந்தைகள்‌, பெண்கள்‌; மற்றும்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்‌ இடையே பாலியல்‌ தொடர்பான எண்ணங்கள்‌ ஏற்பட்டு பாலியல்‌ குற்றச்‌ செயலில்‌ ஈடுபட வாய்ப்புள்ளது.

Police-arrest

இதனால்‌ இளைஞர்‌ சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும்‌ வகையிலும்‌, மேலும்‌ பெண்களின்‌ நாகரிகத்தை இழிவுபடுத்தும்‌ வகையில்‌ வீடியோக்களை சமூக வலைதளங்களில்‌ பதிவு செய்துள்ளார்‌. இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, சைபர்‌ கிரைம்‌ காவல்‌ நிலையத்தில்‌ குற்ற எண்‌. 32/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act) மேற்படி சமூக வலைதளத்தை பயன்படுத்திய நபர்‌ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web