பாம்பை கடித்து துப்பிய இளைஞர்கள்... வீடியோ வெளியிட்ட 3 பேரை தட்டி தூக்கிய வனத்துறை போலீஸ்!!

 
Ranipet

உயிருடன் இருந்த பாம்பை வாயால் கடித்து துப்பி வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோகன் (33), சூர்யா (21) மற்றும் சந்தோஷ் (21). இவர்கள் மூன்று பெரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதோடு இவர்கள் அனைவரும் சேர்ந்து அடிக்கடி எதாவது வம்பு செய்தும் வந்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி இவர்கள் 3 பெரும் அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்துள்ளனர். அப்போது அங்கே ஒரு தண்ணீர் பாம்பு சென்றுள்ளது. இதனை கண்ட அவர்கள் உடனே அதனை பிடித்து விளையாடியுள்ளனர். அதோடு அதனை எதாவது புதிதாக செய்யவும் எண்ணியுள்ளனர்.

snake

அதன்படி உயிரோடு இருக்கும் அந்த தண்ணீர் பாம்பை அதில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய வாயால் அதனை கடித்து துண்டாக்கியுள்ளனர். இவர் கடிப்பதை அருகில் இருந்த நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் இதனை தங்கள் சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். வீடியோ வெளியாகி பலரது கண்டங்களை பெற்ற நிலையில் வைரலானது.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், விலங்கு பிரியர்களும் வன்மையாக கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில், அந்த வீடியோவில் இருக்கும் மூன்று பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலிசார் அவர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Ranipet

உயிரோடு இருக்கும் தண்ணீர் பாம்பை வாயால் கடித்து துப்பி வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர் வனத்துறையினர்.

From around the web