கள்ளக்காதலுக்காக கணவனை தலையில் அடித்து நடுரோட்டில் புதைத்த மனைவி.. தஞ்சையே ஆடிப்போன சம்பவம்!!

 
Tanjore

தஞ்சாவூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு மாத்திற்குப் பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாநிலம் திருவிடைமருதூர் அடுத்த திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் பாரதி (35). இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு, 2 பிள்ளைகள் உள்ளன. சென்னையில் தங்கியிருந்து டீக்கடை ஒன்றில் பாரதி பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த டேவிட் என்ற சதீஷ்குமார் என்பவரிடம் திவ்யா தகாத உறவில் இருந்து வந்துள்ளார். 

Tanjore

இந்த நிலையில், கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, பாரதி மாயமாகியுள்ளார். இதுகுறித்து உறவினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவருடைய மொபைல் எண்ணைப் ஆய்வு செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திவ்யா தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் சேர்ந்து தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

Pandanallur PS

அதனைத் தொடர்ந்து திவ்யா மற்றும் சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், பாலத்திற்காக போடப்பட்ட சாலையில் புதைக்கப்பட்ட பாரதியின் உடலை தோண்டி எடுத்து, மருத்துவர்கள் உதவியுடன் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web