தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் தான் குறி... ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது!!

 
Chennai

குரோம்பேட்டை அருகே மாணவிகளிடம் செல்போனில் ஆபாச வீடியோகளை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் பொக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரம் வினோபாஜி நகரை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நபர் ஒருவர் செல்போனில் விலாசம் கேட்பது போல் அந்த மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காட்டி தவறாக நடக்க முயன்றார்.

Video

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளிக்கு ஓடி சென்று தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் தப்ப முயன்ற அந்த நபரை பிடித்து சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அந்த ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா (25) என்பதும் கால் டாக்சி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனியாக நடந்து செல்லும் மாணவிகளை குறிவைத்து இது போன்ற செயலில் கடந்த ஒரு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது ஓப்புகொண்டார். 

POsco

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சூர்யாவை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web