நண்பர்களால் கோமாவுக்கு சென்ற மாணவன்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

 
Telangana

தெலுங்கானாவில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சதர்காட் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். சம்பவத்தன்று சக வகுப்புத் தோழனான கைஃப், தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார். 

fight

அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைஃப் ஆரிப்பை கடுமையாக தாக்கியுள்ளார். இதனைத் தடுக்காமல சக மாணவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளனர். 

கைஃப் தாக்கியதில் படுகாயமடைந்த ஆரிப்பை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஆரிப் கோமா நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆரிப்பின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


புகாரின் பேரில் போலீசார், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் ஆரிப்பை கைஃப் தாக்கும் வீடியோ இருந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web