குழந்தை கேட்டு நச்சரித்த கள்ளக்காதலி.. கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலன்.. கேரளாவில் பகீர் சம்பவம்!

 
Kerala

கேரளாவில்  கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா (34). அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி கணவனும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதுபோல காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மதியம் 2 மணி அளவில் கள்ளக்காதலியான தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலன் சதீஷ் ஆவூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

murder

இருவரும் 9 ஆண்டுகளுக்கு மேலாக தகாத உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே  சதீஷின் குழந்தையை பார்த்து பிடித்துப் போனதால், தேவிகா சதீஷிடம் அவரது மகளை தனக்கு தந்துவிட கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் தான் இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்ட நிலையில், குழந்த வேண்டும் என மீண்டும் அடம்பிடிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சதீஷ் அறையில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

Police

என்னை வாழ விடவில்லை, எனது குழந்தையை கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். அதை தாங்க முடியாமல் தான் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து தனியார் விடுதியில் சென்று ஆய்வு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காதலன் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web