அட்ரஸ் கேட்ட சாக்கில் தங்கச் சங்கிலியை அபேஸ் செய்த ஆசாமி!!

 
Chain Snatching

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெண் ஒருவரிடம் அட்ரஸ் கேட்டு, பதில் சொல்லும் நேரத்தில் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கலியை திருடிவிட்டு சென்றுள்ளான் ஒரு கொள்ளையன்.

காலேஜ் ரோடு பகுதியை சார்ந்த் சாஃப்ட்வேர் எஞ்சினியர் நந்தகுமாரின் மனைவி பிருந்தா தேவி வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி,  அட்ரஸ் ஒன்றை காட்டி அதற்கு வழி கேட்டுள்ளார். இரக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் ஆசாமிக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த போதே, பிருந்தா தேவி அணிந்திருந்த  தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு பைக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டான்.

பிருந்தா தேதி திருடன் திருடன் என கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள் ஒடிச்சென்று கொள்ளையனை துரத்தினர். ஆனால் அதற்குள் அவன் வேகமாகச் சென்றுவிட்டான். பின்னர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

From around the web