பஞ்சாபில் பயங்கரம்.. கபடி வீரர் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீட்டு வாசலில் எறிந்த கொடூரம்!

 
punjab

பஞ்சாப்பில் கபடி வீரர் ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் தில்வான் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங் (22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வந்தனர். திடீரென்று ஹர்தீப் சிங்கை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது உடல் பாகங்களை வெளியில் வீசிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

Murder

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹர்தீப் சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்வான் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை முன்வைத்து பிரதான எதிர்கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், கபுர்தலா அருகே இளம் கபடி வீரர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைகாரர்களின் அச்சமின்மை இதை பார்த்தாலே புரியும். கொலை செய்த பின்னர் அவர்கள் கபடி வீரரின் வீட்டு கதவை தட்டி சொல்லவிட்டு சென்றுள்ளனர். எனவே இது தனியாக நடந்த சம்பவம் இல்லை.


பஞ்சாப்பில் காட்டு ராஜா ஆட்சி நடைபெறுகிறது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது. இந்த கொலை சம்பவம் மூலம் பகவந்த மான் இதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்னையை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே தாமதிக்காமல் அவர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கபடி வீரர் கொலையான வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் ஆவேசத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

From around the web