சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பயங்கரம்.. பெண்ணை வெட்டி கொன்று தப்பிய கொடூரன்!!

 
chennai

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று வெட்டப்பட்ட ராஜேஸ்வரி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (எ) ராஜேஸ்வரி (35). இவர் சென்னை மின்சார ரயிலில் பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றும் வழக்கம் போல் ரயிலில் வியாபாரம் செய்துள்ளார். இரவு சுமார் 8 மணி அளவில் ராஜேஸ்வரி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் சமோசா வியாபாரம் செய்துள்ளார்.

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி இறங்கிய போது அதே ரயிலில் பயணம் செய்து வந்த மற்றொரு நபர் ரயிலில் இருந்து இறங்கி ராஜஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். அதோடு இல்லாமல் ரயில் எடுக்கும்வரை அவரை கத்தியால் வெட்டிய அந்த இளைஞர் அதே ரயிலில் அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.

murder

ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு ராஜேஸ்வரி மிதந்து உள்ளார். இதையடுத்தே ரயில்வே போலீசார் உடனே அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ஒரு மணி அளவில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் உள்ளதாகவும், எனவே குடும்ப பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Police

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

From around the web