பயங்கரம்!! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!
Jan 11, 2025, 07:49 IST
ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ குர்பிரீத் கோகி பஸ்ஸி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்கு லூதியானாவில் கவுன்சிலராக இருந்தவர், கடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சி தான் தற்போது பஞ்சாபில் ஆட்சி செய்து வருகிறது.
துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்த கோகியை டி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக, இணை காவல் ஆணையாளர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பஞ்சாபில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.