இளம்பெண்ணை கழிவறைக்குள் தள்ளிய இளைஞர்கள்.. சென்னை ரயிலில் பலாத்காரம்.. வெளியான புகைப்படம்

 
Chennai

சென்னை நோக்கி வந்த ரயிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளாவில் இருந்து கடந்த 25-ம் தேதி சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயிலில், பெண் மென்பொறியாளர் ஒருவர் திருச்சி அருகே ஏறியுள்ளார். காட்பாடி அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் மென் பொறியாளரின் செல்போனை பிடுங்கிச் சென்றதாகவும், அவர்களிடம் இருந்து செல்போனை மீட்க முயன்ற போது, கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி அடுத்த பெட்டிக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

rape

இந்நிலையில், மறுநாள் காலை சென்னை வந்ததும், பாதிக்கப்பட்ட பெண், ரயில்வே காவல்துறையில் புகாரளிக்காமல் நேரடியாக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, ரயிலில் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விளக்கி உள்ளார். மேலும், தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த ரயில்வே காவலர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police

இதற்கிடையே சந்தேக நபரின் படத்தை வெளியிட்டுள்ள ரயில்வே போலீசார், சம்மந்தப்பட்ட நபர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண் அடையாளம் காட்டிய ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

From around the web