ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் தொல்லை! விருதுநகர் வாலிபர் கைது!

தூத்துக்குடியில் பயிற்சிக்காக தங்கியிருந்த இளம்பெண் குடும்பத்தின் அவசரநிலை காரணமாக முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்து இரவு புறப்படும் அந்த ஒக்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் விருதுநகர் ஸ்டேஷனில் அதே பெட்டியில் ஏறினார் வாலிபர் ஒருவர். அந்த இளம்பெண் அருகே அமர்ந்து பாலியல் தொல்லைத் தரத் தொடங்கியுள்ளார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைப் பார்த்த சகபயணிகள், அம்பாத்துறையில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் 139 எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த திண்டுக்கள் ரயில்வே போலீசார் அந்தப் பெட்டிக்குள் சென்று பாலியல் தொல்லை தந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எத்தனை சட்டங்கள் போட்டு தண்டித்தாலும் பாலியல் குற்றவாளிகள் திருந்துவதாகத் தெரியவில்லை. கண்முன்னே நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை போலீசாருக்குத் தெரிவித்த சக பயணிகளும் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினரும் பாராட்டுக்குரியவர்கள்.