பள்ளி வகுப்பறையில் ஆசிரியை சரமாரியாக குத்திக் கொலை.. தஞ்சையில் பயங்கரம்!

 
Tanjore

தஞ்சாவூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இப்பள்ளியில் பணியில் சேர்ந்தார். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கும் அவர் காலை 10.10 மணிக்கு பாடவேளை இல்லாததால் ஓய்வில் இருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த சின்னமனையைச் சேர்ந்த மதன் என்பவருடன் ஓய்வறையின் வராண்டாவில் நின்றபடி பேசியுள்ளார். திடீரென ரமணியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மதன் கத்தியால் குத்தியுள்ளார். அதில் ரமணி அலறித் துடித்த நிலையில் மதன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கே இருந்த ஆசிரியர்கள் மதனை விரட்டிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த ரமணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

murder

இந்நிலையில் காவல்துறை விசாரணையில் அதிர வைக்கும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னமனை பகுதியில் ரமணியும், மதனும் ஒரே தெருவில் வசித்து வந்துள்ளனர். மதனும் ரமணியும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர் ரமணியின் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணியை மதனுக்கு மணம் முடித்து தர அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

அதனால் மதன் உடனான காதலை ரமணி கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மதன் பள்ளிக்கு கத்தியுடன் சென்று ரமணியை குத்திக் கொன்றுள்ளார். இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலையை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணியின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

Tanjore

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பதிவிடுடுள்ளார்.

From around the web