சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை.. மூன்று மாதத்தில் 4வது சம்பவம்!!

 
IIT

சென்னை ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷோக்லே கேதார் சுரேஷ் (21). இவர், சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று மாணவர் கேதார் சுரேஷ் தான் தங்கியிருந்த காவேரி ஹாஸ்டல் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த மாணவன் உடலை கைபற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Suicide

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவன் சில நாட்களாக மன உளைச்சில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவருடன் மாணவர் காதலில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. 

IIT

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஐ.ஐ.டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web