மாணவி பாலியல் வன்முறை வழக்கு! காவல் ஆணையர் மீது நடவடிக்கை?
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறை விவ்காரத்தில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. மாணவி கொடுத்த வழக்கின் எஃப் ஐ ஆர் வெளியானது தொடர்பாக கேள்விகள் எழுப்பியுள்ள நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய காவல் ஆணையர் அருண் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த வழக்கில் ஒருவர் தான் சம்மந்தப்பட்டுள்ளார் என்று காவல் ஆணையர் அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள். மேலும் மாணவிக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் கூறியிருந்த நிலையில் அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.