மாணவியை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளைஞர்கள்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

 
Rape

கேரளாவில் உள்ள கடற்கரைக்கு சக மாணவர்களுடன் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவியை கத்தி முனையில் மிரட்டி இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவரும், தூத்தூரை சேர்ந்த ஒரு மாணவரும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். ஒரே வகுப்பில் படிப்பதால் அவர்களிடம் மாணவி நட்பாக பழகி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் விடுமுறை நாளில் சின்னத்துறையை சேர்ந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் தனது தாயாரின் பிறந்தநாளை அருகில் உள்ள பொழியூர் கடற்கரையில் குடும்பமாக கொண்டாட செல்கிறோம். எனவே நீ வா என்று, மாணவியை அழைத்தார். அப்போது மாணவியின் வீட்டில் உள்ளவர்கள் நண்பர் தானே, அதுவும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட கூப்பிடுகிறாரே என்று நினைத்து அவருடன் அனுப்பி வைத்தனர். மாணவியும் நண்பனுடன் சென்றுள்ளார். மாணவியை அழைத்து கொண்டு சிறிது தூரம் சென்றதும் அவர்களுடன் தூத்தூரை சேர்ந்த மற்றொரு மாணவனும் இணைந்து கொண்டார். இந்த மாணவனும் மாணவியுடன் ஒரே பிரிவில் படிப்பவர் தான்.

இந்நிலையில் மாணவி உள்பட 3 பேரும் கேரள மாநிலம் பொழியூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு மாணவரின் தாயாரும் இல்லை, சகோதரியும் இல்லை. இதை கண்டு மாணவி அச்சமடைந்தார். அவர் தன்னை வீட்டில் கொண்டு விடும்படி அவர்களிடம் கேட்டார். ஆனால், 2 மாணவர்களும் அதை கண்டுகொள்ளேவில்லை. அதேநேரம் வாகனத்தின் பையில் மறைத்து எடுத்து வந்த மது பாட்டில்களை எடுத்து குடிக்க தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை வீட்டில் கொண்டு விட்ட பிறகு மது குடியுங்கள் என்று மாணவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். இதற்கிடையே போதை தலைக்கேறியதால் சின்னத்துறையை சேர்ந்த மாணவியின் சினேகிதன், திடீரென சில்மிஷம் செய்ய தொடங்கி உள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

rape

இதனை மது போதையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் பார்த்தனர். அவர்கள் அங்கு வந்து மாணவர்களை தடுத்து நிறுத்தியதுடன், மாணவியின் முன்னாள் மாணவர்களின் ஆடைகளை களைந்து அவர்களை நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கி உள்ளார்கள். தொடர்ந்து 2 இளைஞர்களும் சேர்ந்து கத்தியை காட்டி மாணவியை மிரட்டி உள்ளனர். தங்களுடைய ஆசைக்கு இணங்கமாறு மாணவியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க சத்தம் போட்ட போது, சத்தம் போட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து கடலில் தூக்கி வீசி விடுவோம் என்று மிரட்டி பணிய வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்திருக்கிறார்கள் அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். அத்துடன் மாணவியின் செல்போன் நம்பரையும் வாங்கி கொண்டு விரட்டி உள்ளார்கள்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த மாணவி வாழ்க்கையே தொலைந்து விட்டதே என்று எண்ணி அழுது கொண்டிருந்தார். இந்த நிலையில் பலாத்காரம் செய்த வாலிபர்கள் அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்டு தங்களது ஆசைக்கு இணங்க வருமாறு வற்புறுத்தி உள்ளார்கள். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரப்பிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Police

இதனையடுத்து மாணவி பொழியூர் காவல் நிலையத்திலும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்திலும் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஆசாமியும், அவருடைய கூட்டாளியும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீதும், மாணவியை ஏமாற்றி கடற்கரைக்கு அழைத்து சென்ற சின்னத்துறையை சேர்ந்த மாணவர் மீதும் பொழியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது கூட்டாளி கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளதால் அவர் கரை திரும்பியதும் அவரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதால், மாணவி 2 முறை தற்கொலைக்கு முயன்ற பரிதாப சம்பவமும் நடந்திருக்கிறதாம். தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர் மாணவி புகார் அளித்துள்ளார். இதனிடையே மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஒரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். இதற்கிடையே பலாத்கார வீடியோ வெளியான தகவலை கேட்டு அந்த இளைஞர் திருமணத்தையே நிறுத்திவிட்டார். கடற்கரைக்கு சக வகுப்பு தோழன் கூப்பிடுகிறானே என்று போன பெண்ணுக்கு நடக்கவே கூடாத அனைத்து விபரீதமும் நடந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற மோசமான சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

From around the web