அதிர்ச்சி!! போதைப் பொருளுடன் ஐடி ஊழியர்கள் கைது!
புத்தாண்டு கொண்டாடுவதற்காக போதைப் பொருளுடன் கொடைக்கானல் வந்திருந்த 4 ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் ஒழிப்புக்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. நேற்று சென்னையில் 16 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் தொடர் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், கொடைக்கானலில் 4 ஐடி ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாடுவதற்காக பெங்களூருவிலிருந்து காரில் வந்திருந்தவர்களிடம், வாகன சோதனையின் போது மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் சிக்கியுள்ளது. பிடிபட்ட கேரளாவைச் சேர்ந்த 27 வயது ரஞ்சிஸ், 24 வயது நசீர், 22 வயது ஜிஸ்னு மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த 25 வயது பிரதிக்ஷா ஆகிய நான்கு பேரும் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தக் கைதைத் தொடர்ந்து மேலும் பலர் கைதாவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.