கணவரோடு வாழ விருப்பம் இல்லை.. 39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்..! சேலம் அருகே பரபரப்பு

 
salem

சேலம் அருகே இளம்பெண் ஒருவர் 39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரச மரத்து கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி கௌசல்யா (25). இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். 

Thali-scheme

இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மணிமேகலா (39) என்பவருடன் நேற்று முன்தினம் மாயமாகி விட்டார். கௌசல்யா வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயாகியுள்ளார்.

அந்த கடிதத்தில் கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு, மணிமேகலாவுடன் செல்வதாக எழுதி வைத்துள்ளார். மேலும் தாலி கயிறை கழட்டி கடிதத்துடன் கட்டில் மீது வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். மேகலாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கௌசல்யாவுடன் மாயமாகியது அதிர்ச்சி தகவலாக உள்ளது.

Kondalampatti PS

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் கௌசல்யாவின் கணவர் தாமோதரன் தனது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் மாயமாகிவிட்டதாக புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கௌசல்யாவை தேடி வருகின்றனர்.

From around the web