சிறுமி பாலியல் வன்கொடுமை! அதிமுக வட்டச் செயலாளருக்கு சிறை !!
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்து அரசியலாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் சென்னை அதிமுக வட்டச்செயலாளர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ் என்பவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்த குற்றத்திற்காக அதிமுக வட்டச்செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கை சரியாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளார் ராஜியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜி இடைக்கால பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
வட்டச் செயலாளர் சுதாகர் எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் புகைப்படம் இப்போது சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் தான் அந்த சார் என்று தலைப்பிட்டு இந்தப் படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.