வீடு புகுந்து பெண்களிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!!

தஞ்சாவூரில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் வேட்டி கொள்ளையர்களின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவஸ்தாசாவடி நாகா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மகள்கள் மற்றும் தாய் இந்திராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது நேற்று இரவு இவர்களது வீட்டிற்குள் மங்கி குல்லாவால் முகத்தை மூடி மேலாடை அணியாமல் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் தனியாக இருந்த பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்து சென்றனர்.
இதில் ஹைலைட்டாக கதவில் பதிந்து இருந்த தங்கள் கைரேகைகளை துணியால் துடைத்து விட்டு தப்பி செல்லும் காட்சிகள் அனைத்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
வீடு புகுந்து பெண்களிடம் கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்கள்#Thanjavur #robbery #cctv pic.twitter.com/IVrY6jMWP4
— A1 (@Rukmang30340218) November 29, 2023
இந்த சிசிடிவி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மங்கி குல்லா கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.