மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு.. வரமறுத்த மனைவியை குத்திக்கொன்ற கணவன்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

 
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் வசித்து வருபவர் சின்னமுத்து. இவரது மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். 

Murder

இந்த நிலையில், மாந்தோப்பு உரிமையாளரான பிரகாஷ் என்பவருடன், சீதா தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சீதாவின் கணவர் சின்னமுத்து, பிரகாஷின் மாந்தோப்புக்கு தன் உறவினர்களுடன் சென்று மனைவியை தன்னுடன் வாழ வருமாறு கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில், கடைசிவரை கணவருடன் செல்ல மறுத்து சீதா வாக்குவாதம் செய்துள்ளார். இதையறிந்து அங்கு வந்த பிரகாஷ், தன் காதலியின் கணவர் சின்னமுத்து மற்றும் அவரின் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு சின்னமுத்துவின் உறவினர்கள் சிதறி ஓடிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சின்னமுத்து, தன்னுடன் வர மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.

Police

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாந்தோப்பு உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சின்னமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web