அரசுப்பேருந்தை வழிமறித்து ரீல்ஸ்.. திருவண்ணாமலை இளைஞர் அட்டூழியம்! வைரல் வீடியோ

 
TVMalai

திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்து முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழிமறித்து ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இப்படி எடுப்பதால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிகிறது. மேலும் பல சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.

Reels

இந்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் முக்கிய சாலையின் நடுவே ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிக அளவு புகை வரும்படி ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். போக்குவரத்தை நிறுத்தி பயணிகளுக்கு இடைஞ்சல் செய்தவாறு இச்செயலை செய்த அவர், நண்பர்களை வைத்து இதை வீடியோவும் எடுத்து உள்ளார்.

அரசு பேருந்தை மறித்து இதை ரீல்ஸ் எடுத்த அந்த இளைஞர், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக இதை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. அவரின் இச்செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.


முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த சம்பந்தப்பட்ட இளைஞர் மீது, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web