ஒருதலைக் காதல்! இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து!!

ஒரு தலையாக காதலித்து வந்த உறவுப்பெண் வேறு ஒருவருடன் பழகியதால் கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை நாக்கா பகுதியில் வசித்து வருகிறார் பாயல் ஷிண்டே என்ற 19 வயது இளம்பெண். இவருடைய தாய் வழி உறவினர் கேதர் கணேஷ் ஜங்கம் என்பவர் பாய்ல் ஷிண்டேவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் பாயல் ஷிண்டேவுக்கு இன்னொருவருடன் பழக்கம் இருந்துள்ளது.
நடைபயிற்சிக்காக வந்திருந்த பாயல் ஷிண்டேவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் கேதர் கணேஷ் ஜங்கம். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கணேஷ் ஜங்கம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். காயம் அடைந்த பாயல் ஷிண்டேவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பியோடிய கேதர் கணேஷ் ஜங்கத்தை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.