நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

 
Madurai

மதுரை அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை செல்லூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தெரியாத 4 பேர், அவரை வெட்ட முயன்றனர். 

Murder

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன், தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், ஓட ஓட விரட்டி பாலசுப்பிரமணியத்தை படுகொலை செய்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்ட்ர் தொலைவிலும் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Tallakulam PS

அமைச்சர் சென்னையில் உள்ள போதும் அமைச்சரின் வீடு அமைந்துள்ள வல்லபாய் தெரு போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியில் எப்போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் இப்படி ஒரு படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நிகழ்ந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web